Back to Articles
Article View
Civil Law
Published May 06, 2026

19 Reads
ஒப்பந்தத்தை நிறைவேற்றும் தீர்ப்பு வந்த பிறகு, கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என்ற புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் — பின்னர் அந்த தொகையை சில மாதங்கள் தாமதமாக செலுத்திய காரணத்தால், Section 28 Specific Relief Act கீழ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியுமா?
satheeskumar
Civil Law,Family Law,Property Law,Labour Law,Consumer Law,Other

7 Yrs Exp
Attached PDF Document
Kesavan -vs- Jayarama Naicker.pdf

இந்த தீர்ப்பு, Specific Relief Act Section 28 கீழ் “rescission of contract” எப்போது வழங்கப்படலாம், “readiness and willingness” எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும், மேலும் நீதிமன்ற உத்தரவின்படி தொகை செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் எந்த சூழ்நிலையில் பாதிப்பு (fatal) ஆகாது என்பதைக் குறித்து மிக முக்கியமான சட்டக் கொள்கைகளை விளக்குகிறது.

இவ்வழக்கில், 14.05.1992 அன்று 1.64 ஏக்கர் நிலம் தொடர்பாக விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த மனுதாரர் குறிப்பிட்ட செயல்படுத்தல் வழக்கு தொடர்ந்தார். வழக்கு மனுதாரருக்கு சாதகமாக தீர்க்கப்பட்டதால், எதிர் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது, 30.07.2008 அன்று இரு தரப்பினரும் ஒரு புதிய ஒப்பந்தத்தில் சேர்ந்தனர். அதன்படி, முதலில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேலாக கூடுதலாக ரூ.2,10,00,000/- செலுத்த மனுதாரர் ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில், மேல்முறையீடும் எதிர்முறையீடும் வாபஸ் பெறப்பட்டன.

ஆனால் பின்னர், மனுதாரர், இந்த புதிய ஒப்பந்தத்தை Execution Petition-ல் முழுமையாக வெளிப்படுத்தாமல், பழைய தீர்ப்பை அமல்படுத்த முயன்றார் என்று எதிர் தரப்பு குற்றஞ்சாட்டியது. இதனால், எதிர் தரப்பு Section 47 CPC கீழ் மனு தாக்கல் செய்தது.

நிறைவேற்றும் நீதிமன்றம், புதிய ஒப்பந்தம் இருப்பதை ஏற்று, மனுதாரர் கூடுதல் ரூ.2,10,00,000/- தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவு மேல்முறையீடு செய்யப்பட்டாலும், உயர்நீதிமன்றமும் அதனை உறுதி செய்தது. பின்னர் உச்சநீதிமன்றத்திலும் சவால் செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, எதிர் தரப்பு Section 28 Specific Relief Act கீழ் மனு தாக்கல் செய்து, மனுதாரர் சரியான நேரத்தில் தொகையை செலுத்தவில்லை; எனவே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரியது.

எதிர் தரப்பின் முக்கிய வாதம் என்னவெனில், குறிப்பிட்ட செயல்படுத்தல் என்பது ஒரு சமநீதியியல் நிவாரணம் (equitable relief). எனவே, மனுதாரர் முழு நேர்மையுடன் நீதிமன்றத்தை அணுக வேண்டும். ஆனால், புதிய ஒப்பந்தத்தை மறைத்து பழைய தீர்ப்பை அமல்படுத்த முயன்றதால், அவர் “clean hands” உடன் நீதிமன்றத்தை அணுகவில்லை என்று வாதிடப்பட்டது.

மேலும், 2010-இலேயே கூடுதல் தொகையை செலுத்த உத்தரவு இருந்தும், மனுதாரர் 03.08.2015 அன்று தான் தொகையை செலுத்தினார்; இது அவரது “readiness and willingness” இல்லாததை நிரூபிக்கிறது என்றும், அதனால் Section 28 கீழ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உரிமை உருவாகிறது என்றும் கூறப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் இந்த வாதங்களை ஏற்கவில்லை. முதலில், புதிய ஒப்பந்தம், அதன் விளைவுகள், கூடுதல் தொகை செலுத்த வேண்டிய கடமை ஆகிய அனைத்தும் ஏற்கனவே முந்தைய சுற்று வழக்குகளில் விவாதிக்கப்பட்டு, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டு இறுதி நிலையை அடைந்துவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, அதே விவகாரத்தை மீண்டும் Execution Proceedings-ல் எழுப்ப முடியாது என்று கூறப்பட்டது.

நீதிமன்றம் முக்கியமாக Section 28 Specific Relief Act-ஐ ஆய்வு செய்தது. அந்த பிரிவின் கீழ், நீதிமன்றம் தேவையானால் கூடுதல் கால அவகாசம் வழங்க அதிகாரம் கொண்டுள்ளது என்றும், ஒப்பந்தத்தை ரத்து செய்வது கட்டாயமான விளைவு அல்ல என்றும் கூறப்பட்டது. இது நீதிமன்றத்தின் விருப்ப அதிகாரம் (discretionary power) ஆகும்.

மேலும், இந்த வழக்கில், 23.03.2015 அன்று உயர்நீதிமன்றம் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தாலும், எந்த குறிப்பிட்ட காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அந்த உத்தரவு நகல் late June 2015-ல் தான் கிடைத்தது. அதற்குப் பிறகு, மனுதாரர் challan கோரி மனு தாக்கல் செய்தார்; நீதிமன்றம் 29.07.2015 அன்று challan வழங்கியது; அதற்கு உடனடியாக 03.08.2015 அன்று முழுத் தொகையும் செலுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், ஏற்பட்ட தாமதம் திட்டமிட்ட அலட்சியம் அல்லது வேண்டுமென்றே ஏற்பட்ட தாமதம் அல்ல என்று நீதிமன்றம் கண்டறிந்தது. நீதிமன்ற நடைமுறையால் ஏற்பட்ட தாமதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த வழக்கில் பல முக்கிய தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டன.

Surinder Pal Soni Vs Sohan Lal (2020) 15 SCC 771 தீர்ப்பில், மேல்முறையீட்டு தீர்ப்பிற்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் bona fide-ஆக தொகை செலுத்தப்பட்டிருந்தால், அதை அடிப்படையாக கொண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.

Chanda Vs Rattni (2007) 14 SCC 26தீர்ப்பில், Section 28 கீழான அதிகாரம் முழுக்க விருப்ப அதிகாரம் என்றும், ஒரு decree பிறந்த பிறகும் நீதிமன்றத்திற்கு கால நீட்டிப்பு வழங்க அதிகாரம் தொடர்கிறது என்றும் கூறப்பட்டது.

A.R. Madana Gopal Vs Ramnath Publications (2021) 11 SCC 200 தீர்ப்பில், “readiness and willingness” மதிப்பீடு செய்யும்போது, நீதிமன்ற நடைமுறையால் ஏற்பட்ட தாமதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

Ram Lal Vs Jarnail Singh (2025 SCC Online SC 584) தீர்ப்பில், Section 28 மனுவை Section 5 Limitation Act போல அணுக முடியாது; ஒவ்வொரு நாளும் ஏன் தாமதம் ஏற்பட்டது என்று விளக்கம் கேட்க முடியாது என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்ட காலவரம்பு வழங்காத நிலையில், பழைய காலவரம்பை மட்டும் அடிப்படையாக கொண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது.

V.S. Palanichamy Chettiar Vs C. Alagappan (1999) 4 SCC 702 வழக்கில், காரணமின்றி நீண்ட காலம் தொகை செலுத்தாததால் நிவாரணம் மறுக்கப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் அத்தகைய சூழ்நிலை இல்லை என்று நீதிமன்றம் வேறுபடுத்திக் காட்டியது.

நீதிமன்றம் இறுதியாக கூறியது என்னவெனில், இந்த வழக்கில் மனுதாரர் வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாக எவ்வித சான்றும் இல்லை. உத்தரவு நகல் கிடைத்ததும், challan பெற நடவடிக்கை எடுத்து, குறுகிய காலத்திலேயே முழுத் தொகையும் செலுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த தாமதத்தை “fatal delay” என்று கூற முடியாது.

மேலும், விற்பனைப் பத்திரமும் ஏற்கனவே மனுதாரர் பெயரில் எழுதப்பட்டுவிட்ட நிலையில், தற்போது possession வழங்கும் நிலை மட்டுமே மீதமுள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதன் அடிப்படையில்,

✔ Section 28 கீழ் ஒப்பந்த ரத்து தானாக வழங்கப்படாது

✔ நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்க அதிகாரம் கொண்டுள்ளது

✔ நீதிமன்ற நடைமுறையால் ஏற்பட்ட தாமதம் மனுதாரருக்கு எதிராக பயன்படுத்த முடியாது

✔ ஒவ்வொரு தாமதமும் “readiness and willingness” இல்லாததைக் காட்டாது

✔ இறுதி நிலை அடைந்த விவகாரங்களை மீண்டும் Execution Proceedings-ல் எழுப்ப முடியாது

என்று கூறி, ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிய மனுவை நிராகரித்து, decree holder-க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

CRP Nos.3546, 3548, 3549, 3553 & batch

Kesavan Vs Jayarama Naicker & Ors

Date: 09.01.2026

Coram: Justice P.B. Balaji

Citation: 2026(2)CTC195

Article Discussion (0)
No comments on this article yet. Be the first to comment!
Please sign in to join the discussion.
Sign In