Back to Articles
Article View
Civil Law
Published May 05, 2026

8 Reads
45 ஆண்டுகள் பழைய விற்பனைப் பத்திரத்தை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு — காலவரையறை (limitation) அடிப்படையில் வழக்குரையை உடனே நிராகரிக்க முடியுமா? அல்லது “knowledge” (அறிவு) பற்றிய விவாதம் விசாரணையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டுமா?
satheeskumar
Civil Law,Family Law,Property Law,Labour Law,Consumer Law,Other

7 Yrs Exp
Attached PDF Document
Meeran-vs- Subramani.pdf

இந்த தீர்ப்பு, Order VII Rule 11 CPC கீழ் plaint rejection எப்போது செய்யலாம், குறிப்பாக காலவரையறை தொடர்பான கேள்விகள் எந்த நிலையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்து மிகவும் முக்கியமான மற்றும் விரிவான சட்டக் கோட்பாட்டை விளக்குகிறது.

இவ்வழக்கில், மனுதாரர்கள் தாங்களே suit சொத்தின் முழுமையான உரிமையாளர்கள் என அறிவிக்கவும், பிரதிவாதி தலையீட்டைத் தடுக்கவும், மேலும் 19.05.1975 அன்று செய்யப்பட்டதாக கூறப்படும் விற்பனைப் பத்திரத்தை ரத்து செய்யவும் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர்களின் முக்கியமான வாதம் என்னவெனில், அந்த 1975 பத்திரம் உண்மையானது அல்ல; அது போலியாக உருவாக்கப்பட்டதாகவும், அதன் இருப்பை தாங்கள் அறிந்தது, பிரதிவாதி முன்பு தாக்கல் செய்த வழக்கில் summons பெற்ற பிறகே என்றும் கூறினர்.

இதற்கு எதிராக, பிரதிவாதி, 45 ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு முற்றிலும் காலவரையறைக்கு புறம்பானது என்றும், Order VII Rule 11 CPC கீழ் plaint-ஐ உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார். விசாரணை நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்ததை எதிர்த்து இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் முதலில் ஒரு அடிப்படை சட்டக் கொள்கையை வலியுறுத்தியது: plaint rejection மனுவை பரிசீலிக்கும் போது, plaint-இல் உள்ள சரத்துகள் மற்றும் plaint ஆவணங்கள் மட்டுமே பார்க்கப்பட வேண்டும்; பிரதிவாதி தரப்பின் பதிலுரை அல்லது ஆவணங்களை இந்த நிலையில் எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த வழக்கில், plaint-இல் மனுதாரர்கள் தெளிவாக, 1975 பத்திரம் குறித்து தங்களுக்கு அறிவு கிடைத்தது சமீபத்தில் தான் (summons பெற்ற பிறகு) என்று கூறியிருந்தனர். இந்த கூறு உண்மையா அல்லையா என்பது ஒரு சான்று (evidence) கேள்வி ஆகும். இதனை விசாரணை நிலையிலேயே தீர்மானிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. plaint-இல் உள்ள சரத்துகளை உண்மையென ஏற்றுக் கொண்டால், வழக்கு limitation-க்குள் வருகிறது; எனவே, அந்த நிலையில் plaint-ஐ உடனடியாக நிராகரிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்மானித்தது.

மேலும், மனுதாரர்கள் “forgery” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இது ஒரு உண்மை விவகாரம் என்பதால், அதை நிரூபிப்பது மனுதாரர்களின் பொறுப்பு என்றும், அவர்கள் உண்மையில் எப்போது அந்த பத்திரம் குறித்து அறிந்தார்கள் என்பது சான்றுகள் மூலம் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

நீதிமன்றம் மேலும் இந்த வழக்கின் சூழ்நிலையை ஆய்வு செய்து, 1975 பத்திரத்திற்கு பிறகு 2013 மற்றும் 2019 ஆண்டுகளில் குடும்பத்திற்குள் விடுதலை மற்றும் செட்டில்மெண்ட் ஆவணங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும், அவற்றை பிரதிவாதியே தனி வழக்கில் சவால் செய்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டியது. இதனால், இரு தரப்பினரிடமும் உரிமை தொடர்பான முரண்பாடுகள் இருப்பது தெளிவாகிறது; இத்தகைய சூழ்நிலையில் முழுமையான விசாரணை அவசியம் என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கில் பிரதிவாதி பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். Raghwendra Sharan Singh வழக்கில், plaint rejection என்பது கடுமையான அதிகாரம் என்பதால், plaint-இல் உள்ள சரத்துகளை முழுமையாக வாசித்து, அவை உண்மையென எடுத்துக் கொண்டாலும் வழக்கு தடைசெய்யப்பட்டதா என்பதை பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இவ்வழக்கில் plaint averments-ஐ ஏற்றுக் கொண்டால், வழக்கு limitation-க்குள் வருகிறது என்பதால், அந்த தீர்ப்பு உதவவில்லை. Radhakrishna Reddy வழக்கில், plaint-இலேயே limitation தெளிவாக தெரிந்தால் மட்டுமே rejection செய்யலாம் என்று கூறப்பட்டது; இங்கு knowledge பற்றிய விவாதம் இருப்பதால் அது பொருந்தவில்லை. V.Padma வழக்கில் agent-க்கு தெரிந்தது principal-க்கும் தெரியும் என்ற கோட்பாடு பயன்படுத்தப்பட்டது; ஆனால் இவ்வழக்கில் அத்தகைய நிலை இல்லை. Ramisetty Venkatanna வழக்கில் clever drafting மூலம் limitation தவிர்க்கப்பட்டது; ஆனால் இங்கு plaintiffs நேரடியாக 1975 பத்திரத்தை சவால் செய்துள்ளனர். Shri Mukund Bhavan Trust வழக்கில் illusory cause of action இருந்தது; இங்கு உண்மையான உரிமை விவாதம் உள்ளது. Uma Devi வழக்கில் knowledge பற்றிய plead இல்லாததால் plaint நிராகரிக்கப்பட்டது; ஆனால் இங்கு plaintiffs தெளிவாக knowledge பற்றிய காலத்தை plead செய்துள்ளனர். Indian Evangelical Lutheran Church Trust வழக்கில் plaint-இலேயே limitation தெளிவாக இருந்ததால் rejection செய்யப்பட்டது; இங்கு அத்தகைய நிலை இல்லை.

இதன் மூலம், நீதிமன்றம் ஒரு முக்கியமான சட்டக் கொள்கையை வலியுறுத்துகிறது. limitation சில சமயங்களில் pure question of law ஆக இருக்கலாம்; ஆனால் knowledge அல்லது fraud போன்ற அம்சங்கள் இருந்தால், அது mixed question of law and fact ஆக மாறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், plaint-ஐ ஆரம்பத்திலேயே நிராகரிக்க முடியாது; முழுமையான விசாரணை அவசியம்.

மேலும், Order VII Rule 11 CPC என்பது ஒரு “drastic power” என்பதால், அதை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும், slightest doubt இருந்தாலும் வழக்கை விசாரணைக்கு அனுப்புவது தான் சரியான நடைமுறை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

இதன் அடிப்படையில், plaint averments வழக்கை limitation-க்குள் கொண்டு வருகின்றன, knowledge பற்றிய கேள்வி சான்று மூலம் தீர்மானிக்கப்பட வேண்டியது, forgery குறித்த விவாதம் விசாரணை அவசியமானது, limitation தெளிவாக இல்லாத நிலையில் plaint நிராகரிக்க முடியாது என்பதால், Trial Court வழங்கிய உத்தரவை உறுதி செய்து, Civil Revision Petition-ஐ நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இந்த தீர்ப்பில் கூறப்பட்ட கருத்துகள் prima facie மட்டுமே; அவை main suit-இல் parties வாதங்களை பாதிக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

CRP No.324 of 2024

K.U. Meeran Vs R. Subramani & Ors

Date: 16.02.2026

Coram: Justice S. Sounthar

#Rejectionofplaint
#Limitation
Article Discussion (0)
No comments on this article yet. Be the first to comment!
Please sign in to join the discussion.
Sign In