arrow_back Back to Articles Article View
Civil Law
Published Apr 30, 2026 visibility 8 Reads

சந்தேகத்திற்கிடமான உயில்களை அடிப்படையாக கொண்டு, இணை உரிமையுடைய மகளின் பங்கு உரிமையை மறுக்க முடியுமா — “விலக்கு” (Ouster) நிரூபிக்கப்படாத நிலையில்?

satheeskumar verified
Civil Law,Family Law,Property Law,Labour Law,Consumer Law,Other 7 Yrs Exp
View Profile
picture_as_pdf
Attached PDF Document
Vasantharajan -vs- Vijayalakshmi.pdf
download Download PDF

இந்த தீர்ப்பு, குடும்பச் சொத்துகளில் இணை உரிமையுடைய ஒரே மகளின் உரிமையை, உயில்கள் மூலம் மறுக்க முயற்சிக்கும் சூழலில், அந்த உயில்கள் சட்டப்படி நிரூபிக்கப்பட வேண்டிய கட்டாயம் என்ன, மேலும் “விலக்கு” (ouster) என்ற கோட்பாடு எப்போது பொருந்தும் என்பதைக் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்கிறது. குறிப்பாக, உயில்கள் சந்தேக சூழ்நிலைகளால் சூழப்பட்டிருந்தால், நீதிமன்றம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், இணை உரிமை மற்றும் அனுபவம் தொடர்பான நிலையான சட்டக் கொள்கைகளையும் இந்த தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இவ்வழக்கில், மனுதாரர் தனது தந்தையின் ஒரே மகளாக இருந்து, குடும்பச் சொத்துகளில் தன்னுடைய பங்கு உரிமையை கோரி பாகப்பிரிவு வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக பிரதிவாதிகள், தந்தையும் பாட்டியும் உயில்கள் எழுதி சொத்துகளை தங்களுக்கு வழங்கியதாகவும், அந்த உயில்கள் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாங்கள் தனிப்பட்ட மற்றும் முழுமையான அனுபவத்தில் இருப்பதால் மனுதாரரின் உரிமை நீங்கிவிட்டதாகவும் வாதிட்டனர். மேலும், சொத்துகளில் சில பகுதிகள் மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் வழக்கு தொடர முடியாது என்றும் கூறினர்.

ஆனால், நீதிமன்றம் வழக்கின் உண்மை நிலைகளை விரிவாக ஆய்வு செய்தபோது, பிரதிவாதிகள் முன்வைத்த உயில்கள் எந்தவொரு சட்ட நடைமுறையையும் பின்பற்றி நிரூபிக்கப்படவில்லை என்பதை கவனித்தது. குறிப்பாக, உயில்களை நிரூபிக்க தேவையான சாட்சியாளர்கள் சரியாக விசாரிக்கப்படவில்லை; சில சாட்சிகள் உயிலின் நிறைவேற்றத்தையே மறுத்தனர்; மேலும், உயில்கள் முன்பு எந்த ஆவணங்களிலும் அல்லது தொடர்புகளிலும் குறிப்பிடப்படாதது நீதிமன்றத்தில் சந்தேகத்தை உருவாக்கியது.

நீதிமன்றம் மேலும் முக்கியமான சூழ்நிலையை எடுத்துரைத்தது: தந்தைக்கு ஒரே மகள் இருந்தபோது, எந்தவொரு தெளிவான காரணமும் இல்லாமல், அந்த மகளை முற்றிலும் விலக்கி, சகோதரரின் மகன்களுக்கு முழு சொத்தையும் வழங்குவது இயல்பான மனித நடத்தைக்கு முரணானதாகும். இந்த “unnatural disposition” என்பது உயிலின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் முக்கிய காரணமாக கருதப்பட்டது.

மேலும், உயிலை நிரூபிப்பதில் “suspicious circumstances” என்ற கோட்பாடு மிக முக்கியமானது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. ஒரு உயில் சந்தேக சூழ்நிலைகளால் சூழப்பட்டிருந்தால், அதை முன்வைக்கும் தரப்பு அந்த சந்தேகத்தை முற்றிலும் நீக்க வேண்டும். இவ்வழக்கில், பிரதிவாதிகள் அந்த சுமையை நிறைவேற்றத் தவறியதால், உயில்கள் ஏற்கப்படவில்லை.

இதன் பின்னர், நீதிமன்றம் இணை உரிமை மற்றும் அனுபவம் தொடர்பான முக்கியமான சட்டக் கோட்பாட்டை ஆய்வு செய்தது. குடும்பச் சொத்துகளில் இணை உரிமையாளர் என்ற நிலையில், ஒவ்வொருவரும் சொத்தில் இணை அனுபவத்தில் இருப்பதாகவே சட்டம் கருதுகிறது. ஒரு இணை உரிமையாளரை விலக்க (ouster) செய்ய, வெறும் நீண்டகால தனிப்பட்ட அனுபவம் போதாது. அதற்கு, வெளிப்படையான மறுப்பு, உரிமையை மறுக்கும் தெளிவான நடவடிக்கை, மற்றும் அதனை நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் ஆகியவை தேவை.

இந்த வழக்கில், பிரதிவாதிகள் தாங்கள் பல ஆண்டுகளாக அனுபவத்தில் இருந்ததாக கூறினாலும், மனுதாரரின் உரிமையை வெளிப்படையாக மறுத்ததாக அல்லது அவரை சொத்திலிருந்து விலக்கியதாக எந்த உறுதியான ஆதாரமும் வழங்கவில்லை. எனவே, “விலக்கு” நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்மானித்தது.

மேலும், மனுதாரர் வெளிநாட்டில் வசித்தாலும், அது அவரது உரிமையை பாதிக்காது; இணை உரிமையாளராக இருப்பதால், அவர் சட்டரீதியாக இணை அனுபவத்தில் இருப்பதாகவே கருதப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

மேலும், சொத்துகளில் செய்யப்பட்ட விற்பனைகள் குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்தது. வழக்கு தொடங்குவதற்கு முன் செய்யப்பட்ட விற்பனைகள் இருந்தாலும், அவை மனுதாரரின் உரிமையை முற்றிலும் அழிக்காது. அத்தகைய விற்பனைகள், இறுதி பாகப்பிரிவின் போது, சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளின் பங்கில் சரிசெய்யப்படலாம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதன் மூலம், மூன்றாம் நபர் உரிமைகளும், இணை உரிமையாளரின் உரிமைகளும் சமநிலைப்படுத்தப்பட்டன.

இந்த வழக்கில் நீதிமன்றம் பல முக்கிய தீர்ப்புகளை சார்ந்து தனது முடிவை வலுப்படுத்தியது.

H. Venkatachala Iyengar Vs B.N. Thimmajamma (AIR 1959 SC 443) வழக்கில், உயில் என்பது மரணத்திற்கு பிறகு பேசும் ஆவணம் என்பதால், அது மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும்; குறிப்பாக சந்தேக சூழ்நிலைகள் இருந்தால், அவற்றை நீக்குவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

Jaswant Kaur Vs Amrit Kaur (1977) 1 SCC 369 வழக்கில், உயிலின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தால், அதை முன்வைக்கும் தரப்பு உறுதியான ஆதாரங்களால் அதை நிரூபிக்க வேண்டும்; இல்லையெனில் அது ஏற்கப்படாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

S.R. Srinivasa Vs S. Padmavathamma (2010) 5 SCC 274 வழக்கில், பதிவு செய்யப்பட்ட உயிலுக்கே கூட தானாகவே நம்பகத்தன்மை கிடையாது; அது சந்தேக சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Kartar Kaur Vs Milkha Singh (1996) 1 SCC 731 வழக்கில், இயல்பான வாரிசுகளை விலக்கும் உயில்கள் மிகவும் கவனமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்; அத்தகைய உயில்களுக்கு கூடுதல் ஆதாரம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இணை உரிமை தொடர்பாக P. Lakshmi Reddy Vs L. Lakshmi Reddy (AIR 1957 SC 314) வழக்கில், “விலக்கு” நிரூபிக்க, வெளிப்படையான எதிர்ப்பு மற்றும் உறுதியான ஆதாரம் அவசியம்; வெறும் நீண்டகால அனுபவம் மட்டும் போதாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த அனைத்து சட்டக் கோட்பாடுகளையும் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் தெளிவாகக் கூறியது:

✔உயில்கள் சட்டப்படி நிரூபிக்கப்படவில்லை

✔மனுதாரரின் இணை உரிமை நீங்கவில்லை

✔ “விலக்கு” நிரூபிக்கப்படவில்லை

✔விற்பனைகள் உரிமையை அழிக்காது; பங்கில் சரிசெய்யலாம்

இதன் அடிப்படையில், மேல்முறையீட்டு நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, மனுதாரருக்கு ½ பங்கு வழங்கியது.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

A.S.Nos.623 of 2018 & 318 of 2019

Vasantharajan Vs Vijayalakshmi Krishnaswamy & Ors

Date: 06.02.2026

Citation : 2026(2)CTC138

#Will #partition #tobeproved

comment Article Discussion (0)

No comments on this article yet. Be the first to comment!

Please sign in to join the discussion.

Sign In